பேரன் பேத்திகளை கொஞ்சுவது தனிச்சுகம்.
அதிலும் பிறந்த குழந்தைகளின் மழலையை கேட்பது விவரிக்க முடியாத இன்பம்.
அத்தகைய சுகத்தைத்தான் சரத்குமாரும் மனைவி ராதிகாவும் அனுபவிக்கிறார்கள் இந்த ஊரடங்கு காலத்தில்.!
ராதிகாவின் மகள் ரயான் .கிரிக்கெட் வீரர் அபிமன்யூவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தாரக் என்கிற மகன் இருக்கிறான்.அண்மையில் ரயானுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
ராத்யா மிதுன் என்று பெண் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார் மகள்.
“என் அம்மாவைப் போல என் மகளும் சாதனைகள் புரிவாள் .அதற்காகவே ராத்யா என பெயரிட்டிருக்கிறேன் “என்கிறார் ரயான்.
அம்மாவின் மடியில் மகள் . பேத்தியை கொஞ்சும் தாத்தா சரத்குமாரும் பாட்டி ராதிகாவும்.!இதை மகளே படம் எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போட்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சரத் குமாருக்கு முக்கியமான வேடம் .அதனால்தான் இந்த அளவுக்கு தாடி வளர்த்திருக்கிறார்.கல்கியின் கருத்துப்படி பெரிய பழுவேட்டரையர் கேரக்டருக்குத்தான் இந்த அளவுக்கு தாடி இருக்கும்