கடந்த 2 ஆம் தேதியே வெளியாகி இருக்க வேண்டிய படம் நிசப்தம் .
மாதவன்,அனுஷ்கா ,அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் வாய் பேசாதவராக அனுஷ்கா நடித்திருக்கிறார் என்கிறார்கள் இது ஒரு திரில்லர் ஸ்டோரி .
தயாரிப்பாளர் கோனா வெங்கட் தயாரித்திருக்கிறார். கதையும் அவருடையது என்கிறார்கள்.
கொரானா ஊரடங்கு உத்திரவினால் இந்தியாவில் இருக்கிற அத்தனை தியேட்டர்களும் அடைபட்டு அங்கு நிலவுகிறது ‘நிசப்தம்.’ இந்த படத்துக்கு ஏது இடம்?
எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இருக்கிற கஷ்டம் கோனா வெங்கட்டுக்கும் இருந்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆகாததினால் பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 50 லட்சம் வட்டி கட்ட வேண்டியதாக இருக்கிறதாம் .
ஆகவே படத்தை அமேசான் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்திருக்கிறார். நல்ல விலை. ரொக்கமாக வந்துவிடும்.கவலை இல்லை.
ஆனால் அமேசான் நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
படத்தின் நாயகி அனுஷ்காவின் அனுமதி.மற்றும் புரமோஷனல் வீடியோ தேவைப்படுகிறது என்றார்களாம் .
“முடியாது”என்று அனுஷ்கா மறுத்து விட ,தற்போது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
படத்தின் நாயகன் மாதவன்தானே,அவரிடம்தானே அனுமதியும் புரமோஷனல் வீடியோவும் கேட்டிருக்க வேண்டும். ஆணாதிக்கம் அப்படித்தானே சொல்லுகிறது .
என்னமோடா வெங்கிட்டு!