தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானின் சொந்த அக்கா மகன்.
தற்போது முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
இவரது மனைவி சைந்தவி பின்னணி பாடகியாக இருக்கிறார்.
இவர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், சைந்தவிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷின் குடும்பமே மகிழ்ச்சியில் மிதக்கிறதாம். கொள்ளுப்பேத்தி பிறந்தது ஏ.ஆர்.ரகுமானின் அம்மாவுக்கு தான் செம ஹாப்பி !