கோளறு பதிகம் பாடினால் நல்லது நடக்கும் தீயவை அகலும் என்கிற நம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது.
அதைப்போலத்தான் கொரானா எதிர்ப்பு பாடலும்.!
அறம் பாடிய புலவர்கள் தமிழில் இருக்கிறார்கள். புலவர்கள் வாக்குப் பலிக்கும் என்கிற நம்பிக்கை அரசர்களுக்கு இருந்திருக்கிறது.
“டே அவனுக்கு கருநாக்கு ..சொன்னால் பலிக்கும் அவன் வாயில் விழாதே”என பிள்ளைகளை கண்டித்த பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
கொரானாவை எதிர்த்து சிலர் காமெடியாக பாடினாலும் அவர்களுக்கு எது வருகிறதோ அதைத்தான் செய்கிறார்கள் .அந்த அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் .உணர்வை சந்தேகிக்கக் கூடாது.
கொரானாவை விரட்டுவதற்காக தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூட்டணியாக இணைந்து ஜிப்ரான் இசையில் பாட்டு பாடியிருக்கிறார்.இந்த விழிப்புணர்வு பாடலில் கமலுடன் ஜிப்ரான்,அனிருத்,
இப்பாடல் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் இப்பாடல் வெளியாகும் எனது தெரிகிறது.
”கொரோனாவுக்காக ஏற்பட்டுள்ள இந்த குவாரன்டைன் காலத்தில் கமல் சாருடன் மட்டுமல்ல அனிருத், யுவன், ஸ்ருதி என அனைவருடனும் அவரவர் இடத்திலிருந்தே இணைந்து பணியாற்றியது மிகவும் வித்தியாசமான புதிய யாருக்கும் கிடைக்காத அனுபவம் என்றே சொல்லலாம்.இப்பாடல் உருவான விதமே அலாதியானது’ என்கிறார்.