ஆண்கள் மட்டும்தான் பைக் ரேஸில் கலந்துகொள்ள முடியுமா?
பெண்களால் முடியாதா?
முடியும் .!எத்தனையோ பெண்கள் பைக் வீராங்கனையாக இருக்கிறார்கள் விருதுகளும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சினிமா உலகில் தல அஜித்குமார் மாதிரியாக நடிகைகளில் யாராவது வீராங்கனைகள் இருக்கிறார்களா?
“எஸ் சார் இருக்கிறேன்” என கை உயர்த்துகிறார் நடிகை மாளவிகா மோகனன் .
ரேஸில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார் தளபதி விஜய் பட நாயகி .தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் படங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.
” பைக் ரைடிங் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று!, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியிருக்கிறேன் . என்னால் நிச்சயமாக அவர்கள் அளவிற்கு வேகமாக பைக் ஓட்ட முடியாது என்றாலும், என்னுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக பைக் ஓட்டுவதில் ஈடுபடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் தற்போது இந்த பைக் ஓட்டுவதை நான் மிஸ் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.