முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டாரா?
அப்போலா மருத்துவமனையில் என்ன நடந்தது ,சாவில் மர்மம் இருக்கிறதா?
அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் போட்டார்கள்.ஆரம்பத்தில் அமர்க்களமாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக நீர்த்துப் போய் விட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவில் வலிமையான ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. இவரின் முன் நிற்பதற்கு இன்றைய முதல்வர் முதல் மற்ற தலைவர்கள் வரை தயங்கினார்கள் ,அஞ்சினார்கள் .
“இந்த லேடியா ,அந்த மோடியா?”எனக்கேட்ட சிங்கப்பெண் அல்லவா அவர்?,
அந்த சிங்கப்பெண்ணின் சாவு பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பற்றி மக்களும் மறந்தே போனார்கள்.
அவரது வாழ்க்கையை ‘தலைவி’என்கிற படமாக்கியவர்களும் போதுமடா சாமி என முடங்கி விடுவார்களோ என்கிற பயமும் வந்து இருக்கிறது.
5 கோடி நட்டம் என்கிறார்கள்.
எப்படி ? ஹைதராபாத்தில் டெல்லி பாராளுமன்றத்தைப் போல் மிகப்பெரிய செட் தலைவி படத்துக்காகப் போடப்பட்டது. 45 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதாக திட்டமிடப்பட்டது.ஆனால் ஒருநாள் கூட அங்கு படப்பிடிப்பு நடக்கவில்லை.சென்னையிலும் பிரமாண்டமான செட் போட்டிருக்கிறார்கள்.
ஒரு பயனும் இல்லை. கொரானா ஊரடங்கு உத்திரவினால் எந்த செட்டிலும் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.
ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ள செட் வாட்டர் ப்ரூப் கிடையாது. ஜூன் 8 -ல் பருவமழை தொடங்கிவிடும் என்கிறார்கள். அதற்குள் காட்சிகளை படமாக்கிவிடுவாரா இயக்குனர் ஏ.எல் விஜய்? செட் பராமரிப்பு ,இட வாடகை, ஸ்டுடியோ கட்டணம் என தினமும் தின்று கொண்டிருக்கிறது. இதுவரை 5 கோடி வரை நட்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். வெய்யில்,காற்று இவைகளினால் செட் சிறிது சேதமடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
என்ன செய்ய முடியும்? ஊரடங்கு எப்போது விலகும் ,இவர்கள் எப்படி ஆர்ட்டிஸ்டுகளை ஒன்று சேர்த்து படப்பிடிப்பை நடத்தப்போகிறார்கள்.?
தமிழ் தெலுங்கு இந்தி என மும்மொழி திட்டமாச்சே!
தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் இந்தூரி ,சைலேஷ் ஆர் .சிங் என்ன முடிவில் இருக்கிறார்களோ தெரியவில்லை.!
கங்கனா,அரவிந்தசாமி ,மற்றும் பல பிரபலங்கள் இந்த தலைவி படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்கள்.