இந்திய தொலைக்காட்சிகளில் நடிப்பவர்களைத்தான் குடும்பத்தினர் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள் .வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையான மதிப்பும் மரியாதையும் இவர்களுக்கு இருக்கிறது.
வாய்ப்பு இல்லாமல் ஒதுக்கப்படுகிறபோது பெரிய திரை நட்சத்திரங்களுக்கும் வேடந்தாங்கலாக இருப்பது சின்னத்திரைதான்! அதைப்போல வாய்ப்பு இல்லாத பின்னணிப் பாடகர்களுக்கு வசதியான மேடையாக இருப்பதும் சின்னத்திரைதான். இசை நிகழ்ச்சிகளில் நடுவராக அமர்ந்து கொள்ள முடிகிறதே.!
இந்த கொரானா கொள்ளை நோய் வந்த பிறகு எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் விட்டார்கள்.பெரிய திரை சின்னத்திரை என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவர்க்கும் வேலை வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் தங்களை மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக அசந்து போகிற அளவுக்கு கவர்ச்சிப்படங்களை தங்களது சோசியல் மீடியாவில் பதிவு செய்கிறார்கள் .உடற்பயிற்சி ,சமையல் குறிப்பு என எல்லாமே வீடியோவாக வந்து விடுகின்றன.
அந்த வகையில் சின்னத்திரையில் வில்லத்தனம் செய்கிற பிரபல நடிகை ஜெயா பட்டாச்சார்யா என்கிற நடிகை தன்னை மொட்டை அடிக்கிற வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.இவர் பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர்.
“ஏம்மா மொட்டை?”
”முடியை கவனிப்பதே தனி வேலை. சிக்கு விழாமல்,பொடுகு வராமல் பார்த்துக்கொள்வது போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதற்கு ஷாம்பு ,இன்னும் பல எண்ணெய்கள் சாயம் என மெனக்கெட வேண்டியதிருக்கிறது. . அதனால் மொட்டையைப் போட்டுவிட்டால் இந்த பிரச்னைகள் இருக்காதே?. விக் வைத்துக் கொண்டால் போதும்.. நடிப்பு தான் எனக்கு முக்கியம்” என்கிறார் ஜெயா பட்டாச்சார்யா.
அம்மணிக்கு ஹேர் டை அலர்ஜியாக இருந்திருக்குமோ?