சர்ச்சை நடிகை என்பது கங்கணா ரனாவத்துக்கு மற்றொரு பெயர்…
இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறவர்.. ஜி.வி.பிரகாஷ் இசை
அரவிந்த் சாமி, பூர்ணா, மதுபாலா இன்னும் பலர் நடித்துவருகிற இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஊரடங்கு உத்தரவினால் படப்பிடிப்பு முடங்கிப் போய் இருக்கிறது.
கொரோனா வைரஸ் நிவாரண நிதியுதவியாக தமிழ்த் திரைப் படத் துறையை சேர்ந்த ஃபெப்சி அமைப்புக்கு நிதியுதவியாக ரூ. 5 லட்சம், தலைவி படத்தில் பணிபுரிந்த தினக்கூலி வருமான தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம்என 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
“ஜெயலலிதாவாக நடித்தால் மட்டும் போதுமா? அவங்க மாதிரி கொஞ்சமாவது உதவ வேண்டாமா. என்னால் முடிந்த சிறு உதவி இது” என்கிறார்.
இவரது சொந்த தங்கையின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது.அதை கண்டித்து ஒரு பக்கம் பொங்கி இருந்தாலும் மறு பக்கம் இப்படி கருணையும் வழிகிறது .