மனைவிகளுக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்வதுதான்யா உண்மையான ஹீரோயிசம்.!அவர்கள்தான் ரியல்மேன் .
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டரசிகளுக்கு உதவியாக இருக்கும் ‘ரியல்மேன் ‘யார்?
இந்த ‘பி த ரியல்மேன் ‘சவாலுக்கு யார் ரெடி?ஆண்மை மிகு மனிதன் யார் சார்?
தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி ஒரு சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரமாண்டங்களின் ஆந்திர தேசத்து பிதாமகன் எஸ்.எஸ். ராஜமவுலி வீட்டில் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கிற வீடியோவை வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.
அதை தனது “ஆர்.ஆர்.ஆர் “படத்தின் நாயகர்களுக்கு ‘டேக்’செய்திருக்கிறார்.
இந்த ரியல்மேன் சேலஞ்சை ஜூனியர் என்.டி .ஆர் .ஏற்றுக்கொண்டு அவரும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை ஆந்திரத்து முன்னணி நடிகர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.தற்போது இந்த வீடியோக்கள்தான் வைரல் ஆகி வருகின்றன.
Task done, @imvangasandeep. Throwing the challenge to @tarak9999 and @AlwaysRamCharan..
And lets have some moooreee fun..
Am also challenging @Shobu_ garu, sukku @aryasukku and peddanna @mmkeeravaani..😈😈 #BetheREALMAN pic.twitter.com/DepkfDvzIE— rajamouli ss (@ssrajamouli) April 20, 2020