லி ஃ ப் ட் உயரத் தொடங்குகிறது.!
அந்த லிப்ட்டில் இருந்தவர்களில் ஒருத்தி சீன நாட்டவள்.!
லேசாக இருமத்தொடங்கியதும் அங்கிருந்தவர்களது முகத்தில் கலவரம்.ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை. அதுவரை அவர்கள் கொரானாவைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் இதனால் இயல்பான அச்சம் எழுமல்லவா.!
அவர்களது பயம் அப்போதுதான் அதிகரிக்கிறது .மின் விளக்குகள் அணைந்து விட்டன.ஆபத்து காலத்து சிவப்பு விளக்கு எரிகிறது.
சீனப்பெண் கத்துகிறாள் .”நாம் இங்கேயே சாகப்போகிறோம்”
லிப்டுக்குள் சக்கர நாற்காலியில் இருந்த ஒருவர் பிஸ்டலை எடுத்து அவளுக்கு குறி வைக்கிறார். “இவளிடம்தான் வைரஸ் இருக்கிறது “என கத்துகிறார்.
அவள் பயத்தில் உறைந்து போகிறாள்.ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில்.!
“நாம் சோதிக்கப்படுகிறோம் என்று நினைக்கிறேன்” என ஒருவர் சொல்ல அந்த படத்தின் முன்னோட்டம் முடிகிறது.
கொரானாவைப் பற்றிய முதல் படம் இது.
கனடாவை சேர்ந்த மொஷ்டபா கேஸ்வரி என்பவர் எழுதி இயக்கி இருக்கிற படம். கொரானாவைப்பற்றிய அச்சம் தொடங்கியபோதே கதைஎழுத ஆரம்பித்திருக்கிறார்.இருவாரத்தில் ஸ்கிரிப்ட் வேலை முடிந்திருக்கிறது .
ஒரு வாடகை இடத்தில் செட் போட்டு 10 நாடுகளில் படத்தை முடித்திருக்கிறார்.
இந்த கொரானா கதையின் மய்யமே ‘ஜினோபோபியா”என்கிற மன பயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அந்நியர்கள் மற்றும் அவர்களது கலாசாரம் மீதான பயம் அல்லது வெறுப்பு இதுதான் இந்த கதையின் முக்கிய அம்சம் என்கிறார்கள்.
சிங்கிள் ரூம் திரில்லர் பாணியிலான கதை .
“சீன சுற்றுலா பயணிகள் தாக்கப்படுகிற செய்தியை ஒரு லிப்டுக்குள் இருந்தபோது படித்தேன்.அப்போதுதான் அதை வைத்து ஒரு கதை எழுதி படமாக்கினால் என்ன என்கிற எண்ணம் வந்தது.மொத்தம் மூன்று நாட்களில் ஏறத்தாழ 70 டேக்குகள் வாங்கியது.சவாலான காரியம்தான்.!பணமும் நேரமும் வீணாகியது.”என்கிறார் இயக்குநர் மொஷ்டபா கேஸ்வரி . விநியோகஸ்தர்கள் கிடைக்காத காரணத்தினால் படம் ரிலீஸ் ஆகும் தேதியை சொல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டின் இரு இயக்குநர்களும் கொரானாவை பற்றிய ஸ்கிரிப்டுகள் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.