எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி‘ படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக அறிமுகமாகி தொடர்ந்து, போக்கிரி, ஆழ்வார், சிவகாசி, தசாவதாரம் கஜினி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை அசினுக்கு இன்று காலை டெல்லியில் வெகுசிறப்பாக திருமணம் நடைபெற்றது..இவருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் இன்று காலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது, அதை தொடர்ந்து இன்று மாலையே இந்து முறைப்படி தசித் தேவரானா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.இன்று நடந்த திருமணத்தில் பிரபல நடிகர் மற்றும் அசினின் நெருங்கிய நண்பரான அக்சய் குமார் உள்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். .ஜனவரி 23ம் தேதி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.