அதிமுக கொடி கட்டிக் கொண்டால் 144 தடை உத்திரவை மீறலாம் ,போலீசை மதிக்க வேணாம் என்பது முதல்வர் பழனிச்சாமியின் உத்திரவோ என்னவோ! ,
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் கதிர் தண்டபாணி சரக்கு அடித்து விட்டு போலீசையும் மதிக்காமல் பேசிய ஒரு வீடியோ கஸ்தூரியின் கையில் கிடைத்திருக்கிறது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்பெஷல் லட்டு கிடைத்த கதையாகி இருக்கிறது. சிலம்பம் ஆடுகிறவருடைய கையில் சுருள் கத்தி கிடைத்தால் என்ன ஆகும்?
அந்த அதிமுக பிரமுகர் மிகவும் சவடாலாக பேசியதை அப்படியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விட்டார். அரசு நடவடிக்கை எடுக்கும்ன்னு நம்புறீங்களா?
எடுக்கும் அந்த பெண் போலீஸ் மீது!
இவரு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளராம். அரசும் அமைச்சர்களும் அன்னாடம் மக்களை கெஞ்சிக்கிட்டுருக்காங்க. அவங்க கட்சிகாரங்களே மதிக்கலை. 144ல கூட சரக்குக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை போல. பெண்ணுன்னும் பாக்கல, போலீஸுன்னும் பாக்கல. அப்போ ஊருக்குதான் உபதேசமா ? pic.twitter.com/rLiR1aiC5f
— Kasturi Shankar (@KasthuriShankar) April 22, 2020