முறிந்த முள்ளின் முனை மறுபடியும் ஒட்டிக்கொள்ளுமா?
அதைப்போலத்தான் நொறுங்கி விட்ட காதலும்.!
எஸ்.டி.ஆர் – ஹன்சிகாவின் காதல் எந்த வகையானது என்பது தெரியாது. அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தார்கள் என்பது மட்டும் உண்மை.
2013-ல் மிகவும் பேசப்பட்டது அவர்களது காதல். இருவரும் மறுக்கவில்லை.
“நானும் எஸ் டிஆரும் நட்பில்தான் இருக்கிறோம். எங்களது சொந்த வாழ்க்கையைப் பற்றி பேச விரும்பவில்லை” என்றார்அப்போது ஹன்சிகா.
“எனது பெற்றோரின் சம்மதத்துடன் ஹன்சிகாவை மணந்து கொள்வேன். நானும் அவரும் அஜித் -ஷாலினி மாதிரி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் “என்பதாக தெரிவித்திருந்தார் சிம்பு.
ஆனால் எதனாலேயோ அவர்களின் காதல் முடிவுக்கு வந்து விட்டது.
முன்னாள் காதலி நயனுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதை ஹன்சிகா விரும்பவில்லை என்கிறார்கள்.அது உண்மையா என்பது தெரியாது.
மகா என்கிற படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். அதில் முக்கிய சிறு வேடத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது உண்மை.!
1