தமிழ்த்திரையுலகில் 90- களில் ரஜினி,கமல் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தபழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினரான நடிகை ஷோபனாவின் ஃபேஸ்புக் கணக்கு திடீரென மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஷோபனா, இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தனது ஃபேஸ்புக் கணக்கு மீட்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.