பாகுபலி படபிடிப்பின் போது பிரபாசுக்கும், அனுஷ்காவிற்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டது என்றும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.அதே சமயம் இவர்கள் காதலை அறிந்த பிரபாஸ் வீட்டார் அனுஷ்காவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரபாசுக்கு அவர்கள் உறவு முறையிலேயே உடனடியாக பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்,இதை அறிந்த அனுஷ்கா காதல் தோல்வியால்,யாரையும் சந்திக்காமல் தனியறையில் ஒரு வாரமாக பொழுதை கழித்தார் என்றும், ஆந்திர திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் .பிரபாஸுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று கூறி ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஆனால்,அச் செய்தி குறித்து பிரபாஸ் எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால் பிரபாஸின் பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜு, ‘யாரோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை பிரபாஸின் வருங்கால மனைவி என்று பரப்புவதா’ என தன கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும்,பிரபாஸின் திருமணம் பற்றி கூறுகையில், ‘பிரபாஸின் திருமணம் காதல் மற்றும் பெற்றோர் ஏற்பாடு செய்வதாக இருக்கும். இந்த ஆண்டே திருமணம் நடக்கும்’ என்கிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது? என்பதை பற்றியும்அனுஷ்கா கூறுகையில்,”காதல் என்பது வெறும் கவர்ச்சி தான், அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள். எனக்கு காதல் அனுபவம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை, பல பேர் இளம் வயதில் காதல் வலையில் சிக்கி பிறகு காலப்போக்கில் அதை யோசித்து பார்த்து சிரிப்பார்கள்.தற்போதைக்கு சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறேன், சினிமா மட்டுமே என் காதல். என் திருமணம் தகுந்த நேரத்தில் நடக்கும், எனக்கு வரப்போகும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது, வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.அப்படிப்பட்டவரை சந்திக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறேன் என்றும் அனுஷ்கா கூறியுள்ளது குறிப்பிடதக்கது..