வாரிசுகளின் பிள்ளை என்றால் அதுவும் அழகாகவும் இருந்து விட்டால் அள்ளிக்கொண்டு போக ஆட்கள் தயாராக இருப்பார்கள். பிரபு ,கார்த்திக்,முரளி இவர்களின் வாரிசுகள் நடிக்க வந்ததற்கு அதுதான் முக்கிய காரணம்.
தற்போது தயாரிப்பாளர்கள் இயக்குநர்களின் இலக்கு ஜேசன் சஞ்சய். தளபதி விஜய்யின் மகன் .கனடாவில் இருக்கிறார்.இவர் சில குறும்படங்களை இயக்கியவர்.இயக்குவதற்கு ஆர்வமாக இருக்கிறார்.இவரைத்தான் குறி வைத்திருக்கிறார்கள்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு கதையை செலக்ட் பண்ணி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது சிரஞ்சீவியின் சொந்த சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ்.
இவர் தெலுங்கில் கதாநாயகனாக நடித்துள்ள படம் உப்பெனா.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகி. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் . .புச்சி பாபு சனா இயக்கிஇருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் முடிந்து கொரோனாவினால் வெளியீடு தள்ளிபோய் இருக்கிறது. இந்த படத்தை ரீமேக் செய்ய விஜய்சேதுபதி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.
கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வரும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது., இது குறித்து நடிகர் விஜய்யிடம் பேசி வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர்,ஏ.ஆர்.முருகதாஸ் ,கவுதம் மேனன் ஆகியோரும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள்.
விஜய் என்ன முடிவு செய்திருக்கிறார் என்பது தெரியவில்லை. மகனுக்கு தகுந்த களம் இயக்குவதா,நடிப்பதா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். சில வாரிசுகள் இன்னும் தேக்க நிலையிலேயே இருப்பதால் தளபதி நன்கு யோசித்துதான் கதையையும் இயக்குநரையு ம் தேர்வு செய்வார் என்று சொல்கிறார்கள்.பார்க்கலாம்