விருதுக்குரிய படம் என்றாலே அது ஸ்லோ,போர் .என்கிற கருத்துதான் வெகுஜனமக்களிடம் காணப்படுகிறது.
அத்தகைய கருத்து ராஜமவுலி போன்ற சிறந்த இயக்குநர்களுக்கும் இருக்கிறது .
அகாடமி விருது வாங்கிய படங்களை சிலாகித்து சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் .
“என்னய்யா படம், ம…ரு மாதிரி எடுத்திருக்கான் “என விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
உலக அளவில் ஒரு படம் உயரிய விருது பெறுகிறது என்றால் அந்த படத்தை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அறிவதுதான் மேன்மக்களுக்கு அழகு.!
அதையேதான் எஸ்.எஸ்.ராஜமவுலி போன்ற சிறந்த இயக்குநர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி 1,பாகுபலி 2 படங்களின் மூலம் ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பச் செய்தவர் . ராஜமவுலி..
தற்போது ஆர்.ஆர்.ஆர்.
பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது .
ஜூனியர் என்.டி.ஆர் , ராம் சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அண்மையில் தொலைக் காட்சி ஒன்றின் நேரலை பேட்டியில் பங்கேற்ற ராஜமவுலியி டம்,அகாடமி விருது வென்ற பாராசைட் திரைப்படம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர் சொன்ன பதில்தான் அதிர்ச்சியாக இருந்தது.
“படம் ஆரம்பத்தில் மிகவும் ஸ்லோவ்வாக தான் இருந்தது, அதனால் நான் தூங்கிவிட்டேன் மீதி கதையை எனது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.”
படம் பார்ப்பதற்கு முன்னதாகவே அவர் களைத்திருந்திருக்கலாம் .அதன் உந்துதல்தான் உறக்கநிலை. இத்தகைய நிலையில் படத்தைப் பார்த்து விட்டு படத்தை விமர்சிப்பது நியாயமாக இருக்குமா?உலகத்திலேயே அதிக அளவில் வசூலை வாரிய தென் கொரிய படம் இது.
தொடர்ந்து பேசுகையில், “இந்த படம் எதிர்பார்த்த அளவு உற்சாகமாக இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்” என கூறியுள்ளார்.
இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.