கொரானா படுத்தும் பாடு உங்களை துன்புறுத்துகிறதா?
வேலை இல்லை, வருமானமும் இல்லை ,வெளியில் நடமாடவும் அச்சம். யாரிடமும் கடன் கேட்க முடியவில்லை. நமது பெயரை சொல்லி இன்னொருவன் பணத்தை பயன் படுத்திக்கொண்டிருக்கிறான்..அகவிலை படி இல்லை என்று அரசு சொல்லிவிட்டது இப்படி பலவித கவலைகள் எண்ணங்கள்..
எப்படி தூக்கம் வரும்? கஷ்டம்தான்.!
இதோ சில எளிய வழிகள் !
படுக்கப்போவதற்கு முன்னதாக வெது வெதுப்பான தண்ணீரில் குளியுங்கள்.அதில் பொடி அளவு பேக்கிங் சோடா, இஞ்சி சாறு கலந்து கொண்டு நீராடுங்கள் .உடல் லேசானதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறதா!
படுக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். கவலைகளை நினைக்காமல் உங்களுக்கு பிடித்தமான பாடலை நினைவில் கொண்டுவாருங்கள் அல்லது சில ஹைக்கூ கவிதைகளை நினையுங்கள். அப்படியே படுத்து விடுங்கள்.
விளக்குகள் தூக்கத்தை கெடுத்து விடும். அணைத்து விடுங்கள் .வீட்டம்மாவை அணைக்கும் ஆசை வந்தால் என்ன செய்வது?
இந்த ரணகளத்திலும் அந்த கிளு கிளுப்பு கேட்கிறதா? ஹார்மோனை கட்டுப்படுத்த இயலவில்லையா? உங்களுக்கு ஏற்படுகிற உணர்வு அந்தம்மாவுக்கும் வந்தால் என்ன செய்ய முடியும்?
தெரியலீங்க!
நிம்மதியா தூங்குங்க.!