பாலிவுட் படங்களின் கலெக்சனே கதையில் பல இன்டிமேசி காட்சிகள் இடம் பெறுவதை பொருத்துதான் இருந்து வருகிறது .
அவ்வப்போது பிங்க் ,விக்கி டோனர் போன்ற படங்கள் வெளிவருவது உண்டு.
அந்தப்படங்கள் நேர் கொண்ட பார்வை ,தாராளபிரபு என தமிழில் மறு உருவம் பெறுவதும் உண்டு. இந்த படங்களின் ஒரிஜினலை இயக்கியவர்தான் சுஜித் சர்கார் .பிரபலமானவர்.
தற்போது இவரது கவலை என்ன தெரியுமா?
“ஊரடங்கு சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் முன்னைப் போல நெருக்கமான காதல் காட்சிகளை எடுக்க முடியுமா “என்பதுதான்!
“எடுக்க முடியாதுங்க. மாஸ்க் ,கையுறை அணிந்து கொண்டுதான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும்.
டேக் போகும் போது மாஸ்க் ,கையுறைகளை எடுத்து விட்டு நடிக்க வேண்டும். நடித்து முடித்ததும் மறு டேக் எடுக்கும் வரை சொந்த காரில் போய் மாஸ்க் கையுறையுடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
நீளமான வசனங்கள் இருக்காது.நெருக்கமான லவ் சீன்கள் வைக்க முடியாது. லிப் கிஸ் கிடையாது .சமூக இடைவெளி காப்பாற்றப்பட வேண்டும் .யூனிட் பெரும் சிரமம்தான்!
முன்னைப்போல இரண்டு பூக்கள் உரசிக் கொள்வதைப் போலத்தான் காட்ட வேண்டும்.அல்லது கம்பியூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை நம்ப வேண்டும் .”என்கிறார்.
சூயிங்கம் மென்றபடி லிப் கிஸ் கொடுத்தவர்கள் ,கப் அடித்த வாயர்களுடன் காதல் வசனம் பண்ணியவர்கள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம்.