கொரோனா வைரஸினால் பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும்,இந்த குவாரன்டைன் காலம் தான் நாம் கவனிக்காத பல விஷயங்களை கவனிக்க வைத்துள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் ‘ரியல்மேன்’ என்கின்ற சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் ,துணி துவைப்பது,பாத்திரம் கழுவுவது, சமையல் செய்வதுஉள்ளிட்ட தங்கள் வீட்டின் அன்றாடப்பணிகளை செய்து, மற்றவர்களையும் அப்படி செய்யச்சொல்லி வீடியோவாக வெளியிடும்படி டாக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டை சுத்தம் செய்வது , சமையல் செய்வது என வீட்டுப்பணிகளை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தையும் இந்த சேலஞ்சிற்காக அழைத்துள்ளார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னமும், ரஜினிகாந்தும் சிரஞ்சீவியின் சவாலை ஏற்று வீடியோவாக வெளிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எழுந்துள்ளது