20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். மன்றங்கள் என்கிற அமைப்பை முழுவதுமாக கலைத்து விட்டாலும் தனித்த ஆதரவினை பெற்றிருக்கிற நடிகர்.
இவரது திருமண வாழ்க்கையின் வயது இன்று 20.
மதங்கள் கடந்த திருமணம் .அஜித் ,ஷாலினி இவ்விருவரின் காதலுக்கு மதங்கள் தடையாக இருக்கவில்லை.
“தீபாவளியும் கொண்டாடுவோம்.கிறிஸ்துமஸும் கொண்டாடுவோம். கோவிலுக்கும் போவோம் ,சர்ச்சுக்கும் போவோம் .எங்கள் குடும்பம் மகிழ்ச்சியானது. எங்கள் பிள்ளைகளுக்கு எந்த மத அடையாளத்தையும் சூட்ட விரும்பவில்லை.கற்பிக்கவும் இல்லை அவர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம் “என்கிறார் திருமதி ஷாலினி அஜித்குமார் .
“என்னுடைய மிகப்பெரிய விமர்சகர் ஷாலினி.எனது கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறவர் .எங்கள் குடும்பம் பல்கலைக்கழகம் “என்கிறார் அஜித்குமார்.
அனவுஸ்கா ,ஆதிக் என இரு பிள்ளைகள்.
வாழ்க வளமுடன்!