‘தலைவி ‘கங்கணா ரனாவத் ,ரங்கோலி இருவரும் சகோதரிகள்.
இருவருமே அழகானவர்கள்.
ரங்கோலி இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரியை கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தார்.
ஆனால் ரங்கோலியின் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
ரங்கோலி மறுக்கவே அந்த நபர் மிரட்டி இருக்கிறார். மிரட்டலுக்கும் ரங்கோலி பணியவில்லை.
இதனால் முகத்தில் ஆசிட் வீசிவிட்டார் அந்த நண்பர் .போலீசில் வழக்கு நடந்து அந்த ஆளுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.
தன்னுடைய சகோதரியை கண் போல காத்து வந்தவர் கங்கணா. சகோதரிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உயிரை காப்பாற்றி விட்டார்.
சகோதரிகளில் யாரை குற்றம் சாட்டினாலும் மற்றவர் சண்டைக்கு வந்து விடுவார்.அந்த அளவுக்கு இருவரும் பாச மலர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ரங்கோலி தன்னுடைய டிவிட்டர் பதிவில் மத விரோதமான கருத்துகளை பதிவு செய்து வன்முறையை தூண்டுகிறார் என்கிற புகார் வந்தது. இதனால் ரங்கோலியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை அந்த நிறுவனம் துண்டித்து விட்டது.
இதற்கு கங்கணா கடுமையான கண்டனம் தெரிவித்தார் .டிவிட்டரை தடை செய்து விட்டு இந்திய இணைய தளத்தை உருவாக்குங்கள் என முரசறைந்தார்.
இப்போது மும்பையை சேர்ந்த அலி காஷிப் கான் தேஷ்முக் என்கிற வழக்குரைஞர் போலீசில் கங்கணா மீது புகார் செய்திருக்கிறார்.
“ஒரு சகோதரி வன்முறையை தூண்டுகிறார்.இன்னொரு சகோதரி தனது புகழ் பணம் ,செல்வாக்கு இவைகளை தவறாக பயன்படுத்தி சுயலாபம் கருதி வெறுப்பை வளர்க்கிறார்.”என்று வழக்குரைஞர் கூறி இருக்கிறார்.
“என்னுடைய தங்கை தவறாக பேசியதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் இருவரும் பொது மன்னிப்பு கேட்க தயார் “என்பதாக அறிவித்திருக்கிறார் தலைவி.நடிகை.!