கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா இணைந்து நடித்தபடம். காப்பான்.
அடுத்த அறிவிப்பு என்ன என்கிற எதிர்பார்ப்பு தமிழ்த்திரையுலகில் நிறைய!
,எதிர்பாராமல் ஏற்பட்ட லாக் டவுன் சூழல் அனைத்து துறைகளையும்,மக்களையும் அடியோடு முடக்கி வைத்துள்ளது.
நடிகர் நடிகைகள் பலரும் தங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
சில பிரபலங்கள் பி த ரியல் மேன் ,பில்லோ உள்ளிட்ட சேலஞ்சுகளை அரங்கேற்றி வருகின்றனர்.
கலை இயக்குநரும், நடிகருமான கிரன் வெளியிட்ட தனது பதிவில் இயக்குநர் கே.வி.ஆனந்தின் ஓவியத்தை வரைந்து வெளியிட்டு , மிகவும் அர்ப்பணிப்பான இயக்குநர் கே.வி. ஆனந்த் என்று தலைப்பு கொடுத்திருந்தார்.
இதைப்பார்த்த கே.வி. ஆனந்த், ‘கோவிட் 19,’ உன்னை எவ்வளவு வெட்டியா ஆக்கியிருந்தா, என்னையெல்லாம் ஸ்கெட்ச் போடுவ! … இருந்தாலும் பிரமாதம்!’ என அவரை செல்லமாக கலாய்த்துள்ளார்.
கிரன் ஏற்கனவே அஜித்,சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஓவியமாக வரைந்து இணையத்தில் பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.