ஆணும் பெண்ணும் இணைந்து மனம் விட்டு பேசுதல் ,விரும்பிய இடங்களுக்கு ஒன்றாக செல்லுதல் ,அவர்கள் காதலர்களாகவும் இருக்கலாம் .நண்பர்களாகவும் இருக்கலாம்.ஒருவரை பற்றிய புரிதலுக்கான சந்தித்தல்தான்
.இதுதான் டேட்டிங் என்பது!
முன்பொரு தடவை ராணா டகுபதியும் திரிஷாவும் சில காலம் டேட்டிங்கில் இருந்ததாகவும் அது பலனில்லாமல் போனதாகவும் ராணாவே சொன்ன தகவல்.
தற்போது திரிஷா டேட்டிங் பற்றிய அறிவிப்பை விட்டிருக்கிறார்.
அது கொரானா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கான கற்பனை வளத்தை கண்டறியும் முயற்சியே.!
“என்னுடன் நேரத்தை வீணடிக்காமல் அன்றைய பொழுதினை எப்படி செலவழிப்பீர்கள் என்பதை 500 வார்த்தைகளில் எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“புத்தரும் வாழ்ந்துதான் காட்டு தேடினார்
புலவரும் வாழ்ந்துதான் கவிதை பாடினான்,
பக்தரும் காதலை மறந்ததில்லையே ,
பரமனும் பெண்களை வெறுத்ததில்லையே ,
எங்கே இல்லை இந்த இந்தக் காரியம்
இன்பம் என்பதே உழைக்க காவியம் “என கவிப்பேரரரசு கண்ணதாசன் சொன்னதை போல வாலிபர்கள் கட்டுரை எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இது இதில் போய் முடியுமோ தெரியவில்லை.! வாழ்க திரிஷாயிஸம் !
என்னுடன் கட்டிங் போட ஆசையா? 300 வரிகளில் கவிதை எழுதி அனுப்புங்கள் என்று யாராவது போட்டி வைக்காமல் இருந்தால் சரி.!
ஆனால் அதிக அளவில் கவிஞர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி.!