மூன்றே நாளில் கொரானா காணாமல் போய்விடும் என்பதை நம்பிய மக்கள். வேலையின்மை ,பசிக்கொடுமைகளுக்கு இடையில் மேலும் 4 நாட்கள் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்கிற அறிவிப்பினால் அச்சம் அடைந்து விட்டார்கள்.
ரொட்டித் துண்டுக்கும் வறுமை வந்து விடுமா என்கிற பயம் வந்து விட்டதால் கொரானா கொள்ளை நோயைப் பற்றிய அச்சத்தை சற்றே மறந்து விட்டார்கள் .சமூக இடைவெளியை மறந்தால் சாவின் இடைவெளியும் குறையும் என்பது அறிவுக்கண்களை மூடிவிட்டது . கூடிவிட்டார்கள் பெரும் கூட்டமாக.! மரணம் வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்ததின் விளைவு !
அதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லும்போது ஏளனம் ஏகடியம் கூடாது.
இயக்குநர் வெங்கட்பிரபு. இசைஞானியின் வம்சாவழி வந்தவர்.
அவரின் டிவிட்டர் பதிவு.
“சென்னையில் ஏனிந்த பயம் ? 4 நாள் முழுமையான ஊரடங்கு உத்திரவினால் வைரஸையும் சேர்த்து வாங்குவதைப்போல கூட்டமாக செல்வதா? நான்கு நாளும் பிரியாணியா சமைக்கப் போறாங்க.!அமைதியாக இருங்கள்.இதுவும் கடந்து போகும்.பயம் நல்லதல்ல.” என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
கூடிய பெருங்கூட்டம் பிரியாணி சமைத்து சாப்பிடும் பெருந்தனக்கார கூட்டமாக தெரிந்திருக்கிறது.
இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜாகாமராஜும் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
“உலகின் கடைசி நாளென் றெண்ணி கூட்டமாய் கூடுகிறீர் இதயம் கனக்குது அந்தோ தக்காளி பத்து கிலோ தரிசான உள்ளத்தின் அறியாமை கோடி கிலோ எதற்கும்மை தனித்திருக்க கோருதோ அரசு அதையே நீ கூடிப் பெறுவாய் என்றெனும் சிந்தனை விடுத்து புற்றீசல் போல் மொய்த்து உன்குடி நம்பும் உறவுகளைக் கொல்லாதீர்”
வறுமையின் நிறம் சிவப்பு.