ஆடு ஜீவிதம் என்கிற மலையாளப்படத்தின் சில காட்சிகளை ஜோர்டானில் படமாக்கவேண்டியிருந்ததால் இயக்குநர் பிளசி படத்தின் நாயகன் பிருத்விராஜுடன் அங்கு சென்றிருந்தார். 58 பேர் வரை அந்தக் குழுவில் இருக்கிறார்கள்…ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வாடிரம் பாலைவனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த ஜோர்டான் அனுமதித்திருந்தது
.ஆனால் கொரானா அச்சுறுத்தலால் தடை விதிக்கப்பட்டது.படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பாலைவனப்பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.இந்தியா திரும்புவதற்கு விமான போக்குவரத்து வசதியும் கிடையாது.இதனால் பாலைவனத்திலேயே டேரா அடித்து விட்டார்கள். தற்போது அங்கு நிலைமை சீரடையத் தொடங்கி இருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் உதவியால் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு இந்தியத் தூதரகம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்தப்படத்தில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை.
இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் பிருத்வி ராஜ் கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்தப் படக்குழு இப்போது ஷூட்டிங்கை அங்கு ஆரம்பித்துள்ளது.”கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்து வருகிறோம். பிருத்விராஜ் தொடர்பான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டோம். அவர் இல்லாத மற்றக் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறோம். இதில் சில வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருந்தனர். ஆனால், லாக்டவுன் காரணமாக அவர்களால் ஜோர்டானுக்கு வரமுடியவில்லை’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.