தியேட்டர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எண்ணிக்கை குறையலாம் என்கிறார்கள்.
இத்தகைய சூழலில் சிறு படத் தயாரிப்பாளர்கள் ஆன் லைன் தளத்தை நம்ப வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும் சமூக விலகலைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகலாம்.
திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட இன்னும் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்கிறார்கள்
இதனால் ,ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அக்சய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி பாம்’ என்ற படமும் நேரடியாக ஆன்லைனில் ஒளிபரப்ப, டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது வெற்றிகரமாக முடிந்தால் ஜூன் மாதம் இந்த திரைப்படம் ஆன்லைனில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.