சமீபகால சர்ச்சை இயக்குநர் மோகன் .ஜி.!
இவர் எஸ்.டி .ஆருக்காக ஒரு கதை வைத்திருக்கிறார் என்கிறார்.
ஒரு தயாரிப்பாளர் வந்து சிம்புவின் கால்ஷீட் தன்னிடம் இருக்கிறது .இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று தன்னிடம் கூறியதாக சொல்கிறார் மோகன். ஆனால் இவரது நிலை என்ன?
அவரே சொல்கிறார் :
‘திரௌபதி’ படத்தை தொடர்ந்து, அடுத்த படம் நடிகர் ரிச்சர்டுடன் தான் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன்
இடையில் ஒரு ஹீரோ வந்து , உங்களது அடுத்த படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும். என்று படம் பண்ணுவதில் விடாப்பிடியாக இருந்தார். ஆனால் நான் ரிச்சர்டுடன் தான் அடுத்தபடம் என்பதை அவரிடம் சொல்லிவிட்டேன்.
என்னுடைய ,வலைதளத்தில் ரசிகர் ஒருவர் சிம்புவுடன் ஒரு படம் செய்வீர்களா என்று கேட்டார் ,
அவர் ரெடி என்றால் நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் கதை கூட இருக்கிறது. என்று பதிலளித்து இருந்தேன்.
இதைப் பார்த்த ஒரு தயாரிப்பாளர் எனக்கு போன் செய்து, ‘என்னிடம் சிம்புவின் கால்ஷீட் இருக்கிறது. நீங்க ஓகேன்னு சொல்லுங்க,நாம சேர்ந்து பண்ணிடலாம் என்று சொல்லியிருக்கிறார். எனது அடுத்த படம் நல்லபடியா வெளியாகி அதுவும் ஹிட்டடித்தால் , கண்டிப்பாக சிம்புவுடன் இணைவேன்.சிம்புவுக்காக நான் உருவாக்கி வைத்துள்ளது ஒரு கேங்க்ஸ்டர் கதை.வட சென்னையை மையப்படுத்தியது. சிம்பு விரும்பினால் நான் ரெடி”. என்கிறார் திரௌபதி’ இயக்குனர் .