பிரபு தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினி -ஜோதிகா -நயன்தாரா நடித்திருந்த படம் சந்திரமுகி.
சக்கைப்போடு போட்ட படம். அந்த படத்தில் நாசர் ,வடிவேலு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் .இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.ரஜினி நடித்திருந்த டாக்டர் சரவணன் கேரக்டரில் ராகவாலாரன்ஸ் நடிக்கிறார்.
அசல் சந்திரமுகியில் சரவணனுக்கு ஜாயிண்ட்டாக நயன்தாரா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. இதனால் அனுஷ்கா நடிக்கலாம் என்கிறார்கள்.
காமடி வேடத்தில் வடிவேலு நடிப்பதற்கு தயாரிப்பு நிறுவனமே இயக்குநர் வாசுவிடம் சிபாரிசு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
நடந்தால் நல்லதுதான்.! எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க?