பாலிவுட்டின் பாடகி கனிகா கபூர்.
கொரானா வைரஸ் நோய் பற்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி இருப்பவர். மருத்துவமனையில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று புகார் சொல்லி பரபரப்பை உருவாக்கியவர். மூன்று முறை சோதனை செய்ததிலும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வந்ததால் தொடர்ந்து மருத்துவ மனையில் இருக்க வேண்டியதாயிற்று.
தற்போதுதான் முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார்..
“லண்டன்,மும்பை, லக்னோ இங்கு யார் யாருடன் பேசிப் பழகினேனோ அவர்கள் யாருக்கும் எந்த நோயும் இல்லை.! புரியுதா?
லண்டன் டு மும்பை இன்டர்நேஷனல் விமானம் மார்ச் 10 -ல் பயணம். மருத்துவ சோதனை செய்தார்கள் .எனக்கு ஒன்று மில்லை.11 ஆம் தேதி லக்னோவுக்கு புறப்பட்டேன். உள்ளூர் விமானப்பயணம் என்பதால் எவ்விதமான சோதனையும் இல்லை.
மார்ச் 14,15 நண்பர் ஒருவரின் வீட்டுக்கு லஞ்ச் ,டின்னர் சென்றேன்.நான் யாருக்கும் பார்ட்டி கொடுக்கவில்லை. 17,18 ஆம் தேதி வாக்கில் சில அறிகுறிகள் தெரிந்ததால் மெடிக்கல் செக்கப் செய்து கொண்டேன்..அதன்பின்னர் சிகிச்சை.பிறகு .வீடு திரும்பியாச்சு .21 நாள் வீட்டிலேயேதான் இருந்தேன்.”இதுதான்யா நடந்தது ” என்கிறார் கனிகா.
ஆனால் லக்னோ போலீசார் கனிகா மீது ஐபிசி 269 ,770 ,188 ஆகிய பிரிவுகளில் எப்,ஐ.ஆர் தாக்கல் செய்திருந்தார்கள். அது என்னாயிற்று என்பது தெரியவில்லை.!அதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.