இர்பான்கான். பாலிவுட் நடிகர்.கேரக்டர் ரோல்.சிறந்த நடிகர். இவர் நடித்து முடித்துள்ள படம் ‘இங்கிலீஸ் மீடியம்.’
இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால்.!
நடிகர்களின் வாழ்க்கை சில நேரங்களில் சினிமாப்படக் கதையைப் போல நடந்து விடும்.
இர்பானின் அம்மா சயீதா பேகம் .நேற்று சனிக்கிழமை ஜெய்ப்பூரில் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் இர்பான்கானால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் காணொளி காட்சி வழியாக பார்க்கவேண்டியதாகிவிட்டது.
இதில் என்ன சோகம் என்றால் இர்பான்கானுக்கு கேன்சர். இதை சோசியல் மீடியா வழியாக அவர்தான் அறிவித்தார்..2017-ல் தொடங்கிய சிகிச்சை .குணம் அடைந்து வருகிற நிலையில் அம்மா இறந்து விட்டார் என்கிற செய்தி வந்தால் அந்த மகனால் என்ன செய்ய முடியும்?
நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அம்மாவின் முகத்தை மகனால் பார்க்க முடியவில்லை.
கேன்சரில் இருந்து குணம் பெற்று வருகிற மகனை அம்மாவினால் பார்க்க முடியவில்லை.!
இதுதானேடா விதி என்பது?