பொதுவாக வவ்வால்கள் வீட்டுக்குள் வருவதை நல்ல சகுனம் என்று சொல்லமாட்டார்கள். அதைப்போல ஆந்தைக்கும் கதை சொல்லுவார்கள் .ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்று காலம் காலமாக சொல்லிவருகிறார்கள்.இதைப்போல ,
நாட்டை உலுக்குகிற கொரானா வைரஸ் பரவுவதற்கு மூல காரணமே வவ்வால்தான் என்கிற கருத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன்னுடைய அறைக்குள் ஒரு வவ்வால் புகுந்துவிட்டதை அவசர செய்தி வாசிப்பதைப்போல தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.
“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் அண்ட் ஜூரீஸ் ! பிரேக்கிங் நியூஸ்.! மூன்றாவது மாடியில் இருக்கிற வீட்டில் என்னுடைய அறைக்குள் ஒரு வவ்வால் புகுந்துவிட்டது. அதை விரட்டுவதற்கு பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது.கொரானா போக மறுக்கிறது”என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
இதற்காக அவரைத்தான் கண்டித்து பலர் பதிவு போட்டிருக்கிறார்கள் .”வவ்வால் மீது பழி போடாதீர்கள்சார்!”என்பதாக!