“எல்லோரும் கூடி நிக்கிறபோது ஒரு பெண்ணை மூஞ்சியில் ஆண் அறைவான் .அதை சகித்துக் கொண்டு அவனுடன் பெண் வாழணுமா?”
-இதுதான் ‘தப்பட்’ இந்தி படத்தின் ஒன் லைன்.
அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் மனைவியுடன் வாக்குவாதம் செய்கிறான் கணவன். ஒரு கட்டத்தில் ஓங்கி அறைந்து விடுகிறான்.இனியும் அவனுடன் வாழ முடியாது என்கிற கட்டாயத்தில் விவாகரத்தை நாடுகிறாள் மனைவி.அதன் விளைவுகளை எப்படி சந்திக்கிறாள் என்பதை விரிவாக சொல்லியிருப்பார்கள்.
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருக்கிறார். விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் தப்பட் .
இந்த கேரக்டரை எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என்று டாப்ஸியிடம் கேட்டதற்கு “நான் இயல்பாகவே முரட்டுக்குணம் உள்ளவள்.சின்ன வயதிலேயே போர்க்குணம் வந்து விட்டது. கதையை கேட்டதும் எனக்குப் பிடித்து விட்டது ,உடனே ஒத்துக்கொண்டேன் “என்கிறார் .