கனிகா கபூர்.கடந்த மாதம் தலைப்புச்செய்திகளில் அடிபட்ட பாலிவுட் பின்னணிப் பாடகி.
கொரானாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறப்பட்டவர்.அதிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டு வெளியில் வந்திருப்பவர். சற்று முரண்டு பிடித்தவர்.ஆனாலும் இளகிய மனசு.போலும்.!
தற்போது கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தை நாடியிருக்கிறார்.
“நான் எனது பிளாஸ்மாவை தானம் பண்ணுகிறேன் எடுத்துக் கொள்ளுங்கள் “என்பதாக பேராசிரியர் துலிகா சந்திராவிடம் கேட்டிருக்கிறார்.
“நான் கோவிட் 19 (கொரானா ) நோயாளிகளுக்கு சில உதவிகளை செய்ய விரும்புகிறேன். என்னுடை பிளாஸ்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் “என்று கனிகா கபூர் வந்தார்.பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பட் அதற்கு சம்மதித்து பல சோதனைகளை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பிளாஸ்மா கொடுப்பதற்கு தகுதியானவராக இருந்தால் அவரிடமிருந்து தானம் பெறலாம்.
அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 12.5 க்கு மேலே இருக்க வேண்டும்.50 கிலோ வெயிட் தாண்டியவராக இருக்க வேண்டும்.சர்க்கரை நோய் இருக்கக்கூடாது. இருதய நோய்கள் மலேரியா ,சிபிலிஸ் ஆகிய நோய்களுக்கான கூறுகள் இருக்கக்கூடாது. இவையெல்லாம் தாண்டித்தான் அவர் பிளாஸ்மா தானம் செய்யலாம்” என்கிறார் பேராசிரியர் சந்திரா.
அவர் தகுதியானவர் இல்லை என்றால் மேற்கண்ட குறைகளில் எதோ ஒன்று அவருக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?