நன்றி. படம் :இந்தியன் எக்ஸ்பிரஸ் .
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நம்மை கொரானா அணுகாது.அதனுடைய தாக்கம் குறைந்து விடும் என்கிறார்கள்.
மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அதன்வழியாக ஊட்டச்சத்து ,எதிர்ப்பு சக்தி அடைவதை விட நமக்கு எளிதில் கிடக்கும் பொருட்களால் பானம் தயார் செய்து கொள்ளலாம் .காப்பியை விட எவ்வளவோ பெட்டர் என்கிறார் ரகுல் பிரீத் .அவருக்கு ஊட்டச்சத்து நிபுணர் சிபாரிசு செய்த பானத்தின் செய்முறையை பற்றி அவரே சொல்லியிருக்கிறார்.
புகழ் பெற்ற நடிகை சொல்கிறார்.,அடிக்கடி இன்ஸ்டராகிராம் வழியாக கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு காளையர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறவர்.
செய்முறை:
இஞ்சி -சிறிய துண்டு ,மிளகு ,மஞ்சள் தூள் ,இலவங்கப்பட்டை ,கிராம்பு .இவைகளை 500 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். நன்கு ஆறிய பிறகு நீங்கள் விரும்பினால் சிறிது தேன் கலந்து பருகலாம் என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
வீட்டில்தான் இருக்கிறீர்கள் செய்து பாருங்கள்.