சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பை விஜயே பொங்கலன்று அறிவிப்பார் என அவரின் வட்டாரமே அறிவித்த நிலையில் திடீர் மாற்றமாக இன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.படத்திற்கு புலி என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே சூரியா புலி என்ற பெயரில் தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.