நடிகை கல்யாணியின் அப்பாதான் பிரியதர்ஷன் .பிரபல நடிகை லிஸ்ஸியை கல்யாணம் செய்து கொண்டு பின்னர் டைவர்ஸ் ஆனவர்.
இவர் ஹங்கமா என்கிற இந்திப்படத்தின் இரண்டாம் பகுதியை எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார் .2003 -ல் இந்த படம் நன்றாக ஓடியது. அதனால் இரண்டாம் பகுதியை எடுப்பதற்கு பிரபல நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா,கார்த்திக் ஆர்யன் ,சித்தார்த் மல்கோத்ரா ஆகிய பிரபல நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.
இது பற்றி பிரியதர்சன் வெகுவாக வருத்தப்பட்டிருக்கிறார்.
“நான் அவுட் டேட்டட் டைரக்டர் ஆகிவிட்டேன் என்று நினைக்கிறார்களா? நேரடியாக அவர்களிடம் நான் கால்ஷீட் கேட்டு பேசவில்லை. என்னுடைய கதையை சொல்லி தேதி கேட்கப்பட்டது.அவர்கள் மறுத்திருக்கிறார்கள் .5ஆண்டுகள் இந்தி சினிமாவில் நான் இல்லை என்பதால் காலாவதியான ஆள் என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
என்ன செய்வது …?