சுசி.கணேசன்.
சீயான் விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணு இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் கந்தசாமி. இந்த படத்தை இயக்கியவர் சுசி.கணேசன் .திருட்டுப் பயலே படத்தை எடுத்தவர்.
தற்போது திருட்டுப்பயலே 2 மும்பையில் தயாராகி இருக்கிறது .இந்தி பேசுகிறது.
இந்திப் பட உலக சூப்பர்ஸ்டார் அக்சய் குமார் தன்னுடைய லக்ஷ்மிபாம் என்கிற இந்த படத்தை ஓ.டி.டி.தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் .தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் சூர்யா தன்னுடைய ‘பொன்மகள் வந்தாள் ‘திரைப்படத்தை ஓ.டி .டி .தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்த மறுநாளே அக்சய் குமார் தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது.இந்த படத்தை இயக்கியவர் ராகவா லாரன்ஸ்
சூர்யாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பிரமுகர் பன்னீர்செல்வம் “இனிமேல் சூர்யாவின் படங்களை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க மாட்டோம்”என்பதாக அறிவித்தார்.
ஆனால் இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட 30 தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்கள். வணிக நோக்குடன் படத்தை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்கிற உரிமை தயாரிப்பாளருக்கு இருக்கிறது என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் சூர்யாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இயக்குநர் சுசி.கணேசன் பேசுகையில் “ஓ.டி.டி பிளாட்பாரம் தேவைதான்.!மக்கள் தற்போது தேவையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் குறைந்தது 30 திரைப்படங்களாவது ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டுமே மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். எல்லா தேவைகளும் வீடுகளை தேடி வந்து விடுகின்றன.மக்களின் தேவைக்கு ஏற்ப செல்போனிலேயே படங்களை பார்க்க முடிகிறது.இந்த நிலையில் ஓ.டி.டி .தளத்தில் புதிய திரைப்படங்கள் வருவது தவிர்க்க இயலாதது.”என்கிறார்.
நாளுக்கு நாள் ஓ.டி.டி.தளத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.