லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்வளர்ந்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஏரியா உரிமை 200 கோடிக்கு விற்பனையானதாக சொல்லப் பட்டது..
விஜய் நாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்திருப்பதால் இருவரது ரசிகர்களும் ஆர்வத்துடன் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.
கொரானா மட்டும் வராதிருந்தால் மாஸ்டர் திரைப்படம் என்றோ வெளியாகியிருக்கும். ஊரடங்கு உத்திரவால் உலகமே முடங்கிப் போயிருக்கிற இந்த நேரத்தில் எல்லா தியேட்டர்களும் லாக்டவுன் தான் .
படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுவிட்டது.நடிகைகளே பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். ஆக மொத்தத்தில் மாஸ்டர் படத்துக்கு வணிகரீதியான எதிர்பார்ப்பில் தமிழகம் எகிறலில் இருக்கிறது.
இத்தகைய சூழலில்தான் இன்று புதிதாக ஒரு செய்தி அடிபட தொடங்கி இருக்கிறது.
” விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்பட்டால் விஜய் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுவதாக சொன்னதாக”தகவல் ரவுண்டு கட்டியிருக்கிறது. இது உண்மையாக இருக்குமா?