இந்தி சின்னத்திரையின் பிரபலங்களில் சாந்தினி பகவானானி முக்கியமான நடிகை. தொடக்கத்தில் ஒரு சீரியலில் நடிக்கவிருந்த ஹன்சிகாவுக்கு பதிலாக இவரைத்தான் நடிக்க வைத்தனர். சீரியலில் இவரது சஞ்சீவினி தொடர் பிரபலம் .
ஆஸ்திரேலியாவுக்கு சொந்த விஷயமாக சென்றிருந்த சாந்தினி இந்தியா திரும்புகிற நேரம் பார்த்து கொரானா விரிவடையத் தொடங்கியதால் இன்டர்நேஷனல் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தாயகம் திரும்ப முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் விலை வாசி இவருக்கு கட்டுப்படியாகவில்லை.
கையில் இருந்த காசும் குறையத் தொடங்கவே காஸ்ட்லீயான அறையை விட்டு வெளியேறி வேறு சில பெண்களுடன் கூட்டாக இருந்து வருகிறார்.
. இதுகுறித்து அவர் கூறுகையில், “டிக்கெட்டுகளை புக் செய்ய போன போது எல்லா விமானங்களும் நிறைவடைந்துவிட்டது, மேலும், இந்த நேரத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது இல்லை என்பதால் நான் இங்கேயே தங்கி விட்டேன்.ஆனால், பொருளாதார ரீதியாக மிகவும் கடினமாக உள்ளது. எல்லாமே அதிக விலையில் உள்ளது. என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து சமாளித்து வருகிறேன் சில இந்திய பெண்கள் உடன் சேர்ந்து வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கிறேன் ” என்று பரிதாபமாக கூறினார் .