ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, மெட்ராஸ்’ கலையரசன், அட்டக்கத்தி’ தினேஷ் உள்பட பலர் நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் படவெளியீடு தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘கபாலி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா சென்னை அல்லது மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல்வரும் மே மாதம் 16ஆம் தேதி கபாலி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்