நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில், “கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் சூர்யா, ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை ‘ என்பது ‘திருமூலர் காலத்து சிந்தனை. படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.இந்த அறிக்கையை அப்படியே தனது சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்து, ‘சிறப்பு’ என்றும் வெளிப்படையாகவே தலைப்பிட்டு சூர்யாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
Sirappu 👍 pic.twitter.com/f63971LDCt
— VijaySethupathi (@VijaySethuOffl) April 28, 2020