இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்,மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு,மாநில அரசுகளும் தங்களின் எல்லைகளை மூடிவிட்டது.
இதன்காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை பலர் ரத்து செய்தும்,சிலர் தங்களின் வீடுகளிலும் நடத்திக் கொள்கின்றனர்.இந்நிலையில் வாட்ஸப் மூலம் கேரளாவில் உள்ள வங்கி அதிகாரிஸ்ரீஜித் நடேசன் (வயது 30),லக்னோவில் உள்ள பெண் என்ஜினீயர் அஞ்சனா ஆசாரியை வாட்ஸப் மூலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். வங்கி அதிகாரியான ஸ்ரீஜித் நடேசன் கேரளாவில் கோட்டயத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்தவர். இவருக்கும் ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்த அஞ்சனாவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த நவம்பர் மாதம் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், ஏப். 26ம் தேதி திருமணம் செய்வது என்றும் முடிவானது. இந்நிலையில் லாக்டவுன் திடீரென அறிவிக்கப்பட, லக்னோவில் இன்ஜினியராக உள்ள அஞ்சனாவால் தனது திருமணத்திற்கு கேரளாவுக்கு திரும்ப முடியாத நிலை உருவானது.
திருமணத்தை எப்படி நடத்துவது என ஸ்ரீஜித்தும்,அஞ்சனாவும் பதறித் துடித்தனர்.இதையடுத்து,நிச்சயிக்கப்பட்டஅதே நாளில் திருமணத்தை எப்படியும் நடத்துவது என இருவீட்டாரும் தீர்மானித்து பல வகைகளில் யோசித்தவர்களுக்கு வீடியோ கால் மூலம் வாட்ஸ்அப்பில் நடத்த திட்டமிட்டனர் . இதற்கு ஸ்ரீஜித்,அஞ்சனா இருவரும் ஒப்புக்கொண்டனர்.அதன் படி, கடந்த 26 ந்தேதி லக்னோவில் அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில் ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் அமர்ந்தனர்.முகூர்த்த நேரம் வரவும்,
மணமகன் ஸ்ரீஜித், வீடியோகாலில் அஞ்சனா காட்சியளித்த செல்போனுக்கு தாலியை கட்ட, மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டார். வித்தியாசமாக நடந்த இந்த திருமணத்தில்,மணமக்களுக்கு அருகில் இருந்த இருவீட்டாரும் அட்சதை தூவி ஆசி வழங்கினர்.இந்த சுவாரசியமான,வித்தியாசமான திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
😳😳😳 Kerala வில் 👫💏💑💏💓❤💚💚Video call marriage 😒😒😒 👨👨மாப்பிள்ளை கேரளாவில்👨 💃💃👫👫பொண்ணு லக்னோவில்💃💃
Posted by Karuppusamy Boopathi on Monday, April 27, 2020