கைதி படத்தை அடுத்து , இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,இயக்கிய படம்தான் மாஸ்டர்.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள இந்தப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக விருந்த நிலையில்,, ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது.
சரி படத்தின் முன்னோட்டத்தையாவது இப்ப வெளியிடுங்கய்யா என்று விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் லோகேஷ் கனகராஜை வற்புறுத்தினார்கள்.
30 சதவீத இறுதிக்கட்ட பணிகள் மீதம் இருப்பதாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் படம் முடிக்கப்பட்டு, வெளியீட்டு தேதி உறுதியான பின்னர்தான் டிரைலர் வெளியிடப்படும் என்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துவிட்டார்..
இதனால் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் அன்றும் மாஸ்டர் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது..இப்போதுதான் இன்னொரு சஸ்பென்ஸ் மேட்டர் வெளிவந்திருக்கிறது.
விஜய் இரு வேடங்களில் நடித்து உள்ளதாகவும் அதில் ஒரு கேரக்டரை மட்டும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, லோகேஷ் கனகராஜ் சிரித்தபடி, ‘படம் வெளியாகும் போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்’ என நழுவி விட்டார்.
“இரட்டை வேடமா,இல்லையா “என்பதை சொன்னால் என்னய்யா குறையப்போகிறது?