“கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செலவு செய்ய வேண்டும்” என்றுநடிகை ஜோதிகா கூறியதை சிலர் அரசியல் ,மத ரீதியான சர்ச்சையாக மாற்றி இருந்தார்கள். ஆனால் அந்த கருத்துகளுக்கு மக்களின் ஆதரவு இல்லாது போய்விட்டது. பேசாத ஒன்றை பேசியதாக சொன்ன பொய் எடுபடவில்லை.
இவ்விவகாரம் குறித்து நடிகர் சூர்யா, ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை ‘ என்பது ‘திருமூலர் காலத்து சிந்தனை. படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் “என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை அப்படியே தனது சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்து,அவர் ‘சிறப்பு’ என்றும் தலைப்பிட்டு வெளிப்படையாகவே சூர்யாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.