‘கொஞ்சும் மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி ‘ என்பது திரைப்பட பாடலொன்றின் முதல் வரி. இது நாயகிக்காக அந்த காலத்தில் ஒரு கவிஞர் எழுதியிருந்தார் .தற்காலத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.
தன்னுடைய மார்பகத்தை தானே மெச்சிக் கொண்டு படம் போட்ட மீரா மிதுன் அப்பப்ப சமூக அக்கறை கொண்டு பொங்குவார்.பல புகார்கள் இவர் மீது சொல்லப்பட்டுள்ளன.ஆனாலும் நடவடிக்கை எதுவும் இல்லை.! ஒரு வேளை அவையெல்லாம் தவறான புகார்களாக இருக்குமோ?
யார் கண்டது?
தற்போது ,
‘ இந்த அரசு தவறாக செயல்படுகிறது. ஒவ்வொருவரும் சுத்த வேஸ்ட். தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. என்னென்ன தவறு நடக்கின்றது என்பதை விரைவில் விளக்குகிறேன்’ என்று கூறி இருந்தார். .
மீராமிதுனின் இந்த டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது மறுபடியும் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
“நான் உண்மையை பேசியபோதிலும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து ரொம்ப சீப்பாக நடந்து கொள்கின்றார்கள்.
அவர்களின் ஆட்கள் என்னை மிரட்டி என்னுடைய டுவிட்டை டெலிட் செய்ய சொல்கிறார்கள். இந்த அரசு தவறாக செயல்படுகிறது.
ஒவ்வொருவரும் சுத்த வேஸ்ட். தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. என்னென்ன தவறு நடக்கின்றது என்பதை விரைவில் விளக்குகின்றேன்’ என்று கூறியுள்ளார்.
மீராமிதுனின் இந்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.