தமிழ்ச்சினிமாவின் அடுத்த தளம் டிஜிட்டல் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட மாதிரிதான்!
கவுதம்மேனன் போன்ற சில இயக்குநர்கள் வெப் சீரியல்கள் தயாரிக்கிறார்கள் இயக்குகிறார்கள் .
இந்த வரிசையில் பிரபல இயக்குநர் முருகதாசும் இறங்குகிறார் என்கிறார்கள். தர்பார் படத்தை அடுத்து விஜய்யின் படத்தை இயக்குவார் என்று முன்னர் பேசினார்கள்.கொரானா வைரஸ் காரணமாக மொத்த இண்டஸ்ட்ரியும் முடக்கப்பட்டுவிட்டதால் அந்த திட்டத்தை தள்ளிவைத்து விட்டு முருகதாஸ் வெப் சீரியலை தொடங்கப்போவதாக சொல்கிறார்கள்.
சின்னத்திரை நடிகையும் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்த வாணி போஜனை வைத்து அந்த தொடர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏஆர் முருகதாஸின் உதவியாளர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் ,கொரோனா பரபரப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த வெப்சீரீஸில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.