பீப் பாடல் விவகாரத்தால் சிம்பு மற்றும் அனிருத்துக்கு பெரும் சரிவு ஏற்பட்டுளாதாக கூறப்படுகிறது.,இந்த பிரச்சனைக்கு பின்னர் சிம்பு ரூ.30 கோடி பட்ஜெட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவர் நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.ஆனால்,இது குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில்,அனிருத் தனுஷின் கொடி படத்தில் இசையமைக்க இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதேபோல் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் இருந்தும் அனிருத் நீக்கப்பட்டுள்ளார்.திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நிதின், சமந்தா நடித்து வரும் ‘மிக்கி ஜே.மேயர்’ என்ற படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.அனிருத் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ஒரே ஒரு படத்துக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.