ஸ்ரேயா சரண். தமிழ் தெலுங்கு என ஒரு காலத்தில் ரவுண்டு கட்டியவர் . ரஜினிகாந்த் ,விஜய் ஆகியோருடன் நடித்திருப்பவர். சிவாஜி படத்தில் ‘சஹானா ‘பாடல் இவருக்காகவே எழுதப்பட்டதோ என நினைக்கிற அளவுக்கு அழகு காட்டியவர். அம்சமான நடிகை.
ருஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கோஸ் செவ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்6டிருக்கிறார் . வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வருகிறார் .இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தின் வழியாக தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் உண்டு. தற்போது மகிழ்ச்சியான தருணம் என்பதாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
“இந்த மாறுபாடான காலத்தில் என்னுடைய சிரிப்பு உங்களின் மகிழ்ச்சிக்காக ! எங்கள் பால்கனியில் என்னுடைய காலைப் பொழுது”என சொல்லியிருக்கிறார்.