பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர்,(வயது 67). திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள, ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்குமருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிக்சை அளித்து வந்தனர் இந்நிலையில் சிகிசசை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.
புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகனான இவர் ‘பாபி’ இந்திப்படம் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமானார் , ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.1970ல் தனது தந்தை ராஜ் கபூருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘மேரா நாம் ஜோக்கர்’படத்திற்காக ரிஷி கபூருக்கு தேசிய விருது கிடைத்தது.ரிஷிகபூர் மரணம் குறித்து,நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில்,ரிஷிகபூர் மறைந்துவிட்டார்.அவரது மரணம் என்னை மிகவும் நொறுங்க செய்துள்ளது.எனக்குறிப்பிட்டுளார். ரிஷிகபூரின் மரணம் இந்தி திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.